சாயர்புரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாயர்புரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-11-02 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரத்தில் உள்ள டாக்டர் ஜி.யூ.போப் பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சாத்தான்குளம் கவுன்சில் சேர்மன் குருஸ் பர்ணபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளர் ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்கலுக்கு பட்டம் வழங்கினார். காருண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக டீன் பிரின்ஸ் அருள்ராஜ் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். விழாவில் கல்லூரி முதல்வர் ஜாபிந்த், போப் கவுன்சில் தலைவர் அகஸ்டின் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்