பட்டமளிப்பு விழா

திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-04-19 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் தலைமை தாங்கினார். சகுந்தலா அம்பாள், முன்னாள் கல்லூரி செயலர் ராமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதல்வர் ஜெயகுமார் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவி கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து 625 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பேராசிரியர் கோபிநாத் நன்றி கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்