பட்டமளிப்பு விழா

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 2022- 2023-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2023-04-12 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 2022- 2023-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மேகலா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை பல்கலைக்கழக மத்திய கருவி மற்றும் சேவை ஆய்வக இயற்பியல் பள்ளியின் துணைத்தலைவர் நெடுமாறன் கலந்து கொண்டார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி கலந்து கொண்டு 600 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பட்டமளிப்பு நாள் என்பது ஒரு கல்வி நிறுவன காலண்டரில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். அறிவை தேடுவதில் பொன்னான சில ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரு மாணவனின் வாழ்க்கையில் முக்கியமான அடையாளமாகும். பெற்றோர் செய்த தியாகத்தால் நீங்கள் பட்டதாரிகளாக ஆகிவிடுகிறீர்கள். இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் நேர்முறையாக லட்சியத்தை தங்களுக்குள் வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்