பட்டமளிப்பு விழா
தேனி கம்மவார் சங்க கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தேனி கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, கல்லூரி செயலாளர் தாமோதரன், இணைச்செயலாளர் ஸ்ரீதர், கல்லூரி பொருளாளர் ரெங்கராஜ் என்ற கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில் 2018-2021-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக தரம் பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். விழாவில் சங்க நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.