பட்டமளிப்பு விழா
புளியங்குடி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது;
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மனோ கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை, பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குனர் வெளியப்பன், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் 230 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.