ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி சப்ளையர் அசோசியேசனைச் சேர்ந்த ஜவகர், ரமேஷ், ஒப்பந்ததாரர்கள் சங்க துணைத்தலைவர் பரமசிவன், துணை செயலாளர் சோமசுந்தரம், ஒப்பந்ததாரர்கள் சங்கம் பாலசுப்பிரமணியன், சுரேஷ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு இருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தொழில் வளம் மிக்க மாநிலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வந்தால்தான் தொழில்கள் சிறக்கும். ஸ்டெர்லைட் ஆலை கொடுத்த ஆதரவால் சிறுதொழில்கள் நன்றாக இருந்தது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.