திருமண ஏக்கத்தில் காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமண ஏக்கத்தில் காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-08-25 15:38 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் ரதீஷ் (வயது35). இவர் கட்டிட காண்டிராக்டராக வேலைபார்த்து வந்தார்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால், எந்த வரணும் அமையவில்லை. இதனால் ரதீஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரதீஷ் உணவு ஏதும் சாப்பிடாமல் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

சிறிது நேரம் கடந்து தாயார் கதவை தட்டி ரதீசை அழைத்தார். ஆனால், உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. ரதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகாத ஏக்கத்தில் காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்