ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-24 15:11 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி டானிங்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). ஒப்பந்ததாரர். இவருக்கு திருமணமாகி உஷா (41) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சண்முகம் கட்டுமான பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக தொழில் சரியாக நடைபெறாததால், அவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால், சண்முகம் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சண்முகம் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அறைக்குள் சென்றவரை காணாததால், குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்