காண்டிராக்டரை தாக்கி 5 பவுன் நகை-பணம் பறிப்பு

குளச்சல் அருகே காண்டிராக்டரை தாக்கி 5 பவுன் நகை-பணம் பறிப்பு;

Update: 2023-01-09 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 49), காண்டிராக்டர். நேற்று முன்தினம் மாலை ஜெயக்குமார் சலேட் நகரில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த குறும்பனை வயல்காலனியை சேர்ந்த ஆரோக்கியம் (50) மற்றும் அவரது மகன் ஆகியோர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி எங்கள் வீட்டருகே குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைக்க நீதான் காரணம் எனக்கூறி அவரை கம்பியால் தாக்கினர். இதை பார்த்து அங்கு வந்த ஜெயக்குமாரின் தம்பி டென்சிங் குமாரையும் அவர்கள் ஹெல்மெட்டால் தாக்கியதுடன், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் சட்டை பையிலிருந்த ரூ.5 ஆயிரத்தையும் பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார், டென்சிங் குமார் ஆகியோர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோக்கியம் மற்றும் அவரது மகன் ஆகிய 2 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்