ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியா ளர்கள், டிரைவர்கள், கணினி ஆபரேட்டர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும், பணி பாது காப்பு, குப்பைகளை சுத்தம் செய்வதை தனியாருக்கு மாநகராட்சி வழங்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு வந்து தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட் டவர்களிடம் மேயர் கல்பனா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து பன்னீர்செல்வம் கூறும்போது, ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை (இன்று) மாலையில் அதிகாரிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மேயர் உறுதி அளித்து உள்ளார் என்றார். இதில் துணைத்தலைவர் சரவணன் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
---
Image1 File Name : J_JOSEPH_Staff_Reporter-18546621.jpg
----
Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore