ரேடியோ காலர் மூலம் மக்னா யானை தொடர் கண்காணிப்பு

கோவையில் பிடிபட்ட மக்னா யானை மந்திரிமட்டம் வனப்பகுதியில் நடமாடி வருவதாகவும், ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2023-02-25 18:45 GMT

வால்பாறை

கோவையில் பிடிபட்ட மக்னா யானை மந்திரிமட்டம் வனப்பகுதியில் நடமாடி வருவதாகவும், ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

ரேடியோ காலர் மூலம் கண்காணிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து, கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு வந்து விட்டனர். பின்னர் இந்த மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்கள், குடியிருப்பு வழியாக நடந்து மதுக்கரை, குனியமுத்தூர் பகுதிக்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மானாம்பள்ளி வனச்சரகம் மந்திரிமட்டம் வனப்பகுதியில் மக்னா யானை விடப்பட்டது. தொடர்ந்து மக்னா யானையை ரேடியோ காலர் மூலம் கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அச்சம்

இதற்கிடையில், மந்திரிமட்டம் வனப்பகுதிக்கு அருகே உள்ள மானாம்பள்ளி மின்நிலைய குடியிருப்பு, உருளிக்கல் எஸ்டேட், கூமாட்டி மலைவாழ் மக்கள் கிராம் உள்ளதால் இந்த பகுதி மக்கள் மக்னா யானை குடியிருப்புக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும் மக்னா யானை விடப்பட்ட இடத்திற்கு அருகில் ஏற்கனவே பாதுகாப்பு கூண்டு அமைத்து புலிக்கு வேட்டை கற்றுக் கொடுத்து வரும் இடம் உள்ளதால் அந்த பகுதிக்கு யானை சென்றுவிடாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்