தொடர் மழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின..!

தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.;

Update: 2022-11-13 04:54 GMT

சென்னை,

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மானாமதி ஏரி, தையூர் ஏரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

பாசன ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரிகளில் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்