ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-08-27 16:19 GMT

ஓசூர்

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,687 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 1,945 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,340 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கெலவரப்பள்ளி அணை அருகே எல்லையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்