மலையோர பகுதிகளில் மழை நீடிப்பு

மலையோர பகுதிகளில் மழை நீடிப்பு சிற்றார் 1 அணை பகுதியில் 12.4 மில்லி மீட்டர் பதிவு

Update: 2022-12-12 18:45 GMT

நாகர்கோவில், 

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1 அணை பகுதியில் 12.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுபோல் பிற இடங்களில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-1.4, களியல்-2, குழித்துறை-4, பேச்சிப்பாறை-11.8, பெருஞ்சாணி-4, புத்தன்அணை-2.6, சிற்றார் 2-9.2, தக்கலை-2, மாம்பழத்துறையாறு-1, குருந்தன்கோடு-8.4, முள்ளங்கினாவிளை-4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,054 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 195 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 44 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 64 கனஅடி தண்ணீரும் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 788 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்