பெங்களூருவில் இருந்த சென்னை துறைமுகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த கன்டெய்னர் லாரிகள்
பெங்களூருவில் இருந்த சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தது.
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் கன்டெய்னர் லாரிகளுக்கு வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களுருவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வெடி பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஏற்றி வந்த 65 கன்டெய்னர் லாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. போலீஸ் ஜீப் முன்னால் செல்ல அதனை பின்தொடர்ந்து கன்டெய்னர் லாரிகள் வரிசையாக சென்னை துறைமுகத்துக்கு சென்றது.