கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியிலிருந்து மோட்டார் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் கம்பெனிக்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சென்று இரண்டு கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதில் டிரைவர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார்.