கோழிக்கழிவு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பறிமுதல்

பணகுடி அருகே கோழிக்கழிவு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-29 20:02 GMT

பணகுடி:

பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்த பொதுமக்கள் இதுபற்றி பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டிரைவர் ஜோய் (வயது 40), தூத்துக்குடியை சேர்ந்த கிளீனர் இசக்கி ராஜா (21) ஆகியோர் என்பதும், கொல்லத்தில் இருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்