மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.;

Update: 2023-02-17 21:04 GMT

நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள நகர்ப்புற கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர், மின்நுகர்வோர் கொடுத்த மனுக்களை பெற்று அவைகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மின்ஊழியர்களுக்கான பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்