மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது

Update: 2023-07-16 18:45 GMT

சிவகங்கை

திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெறுகிறது. எனவே திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்