மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கடையநல்லூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.;
கடையநல்லூர்:
நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி, மின்நுகர்வோர்களிடம் மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் ஆதிலட்சுமியிடம் தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.