நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மின்கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-09-18 18:45 GMT

ராணிப்பேட்டை செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மின் பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வேலூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களை குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்