நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்
அம்பலவயல் அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அம்பலவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கமலாம்பிகை தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் ஆசிரியர் அமுதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூடலூர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருக்கவும், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களை அறிந்து படிப்பை தேர்வு செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.