நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர், மகளுடன் பலி

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர், மகளுடன் உயிரிழந்தார். 3 வயது பெண் குழந்தை படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

Update: 2023-05-06 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர், மகளுடன் உயிரிழந்தார். 3 வயது பெண் குழந்தை படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

தந்்தை- மகள் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம்(வயது55). இவர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மகள் மதுமதி(29). நேற்று திருவாரூரில் உள்ள உறவினரை பார்க்க மீனாட்சிசுந்தரம் தனது மகள் மதுமதி மற்றும் பேத்திகள் தமிழ்இனியா(3), சியாரா(2) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மன்னார்குடி வழியாக திருவாரூருக்கு சென்று கொண்டிருந்தார்.

சவளக்காரன் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கொரடாச்சேரியில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் உயிரிழந்தனர்.

சிகிச்சை

தமிழ் இனியா படுகாயம் அடைந்தார். சியாரா காயமின்றி தப்பினாள். . உடனே அக்கம்பக்கத்தினர் தமிழ் இனியாவை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் குழந்தை தமிழ்இனியா மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்குப்பதிவு

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி தாலுகா நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாட்சிசுந்தரம், மதுமதி ஆகியோரின் உடலை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மீனாட்சி சுந்தரத்தின் உறவினர்கள் ஏராளமானோர் கூடி கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. இது குறித்து மன்னாா்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்