அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை இறுதி செய்திட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-31 22:29 GMT

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை இறுதி செய்திட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம் தலைமை தாங்கி கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 332 வாக்குச்சாவடி மையங்களிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை (ஊரக பகுதியில், நகரப்பகுதியில் 1,500) கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ளவை, பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பான பணிகள் கடந்த 12-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டது.

வாக்குச்சாவடி மையங்கள்

இவ்வாறு தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 12 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதற்கட்டப்பணியாக பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 652 வாக்குச்சாவடி மையங்களில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடி மையங்களிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 வாக்குச்சாவடி மையங்களிலும் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ள காரணத்தால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்கப்படவும், மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் மொத்த பட்டியலையும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஆர்.டி.ஓ. நிறைமதி, நகராட்சி ஆணையாளர் ராமர், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்