ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்

ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2022-12-25 20:30 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சோழவந்தான் முதல் பேரனை வரை செல்லும் சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலை துறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டது. துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இதுகுறித்த நோட்டீசை வினியோகம் செய்தனர். மேலும், ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பாதிக்கு மேல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பட்டா நிலமாகவும், வீட்டு அடிமனையாகவும் உள்ளதாகவும்,. இது தொடர்பாக, கலெக்டரிடம் நேரில் முறையிடவும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்