மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு கூட்டம்

காமநாயக்கன்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-16 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜோன்ஸ் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சேசுராஜா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் போத்திலட்சுமி, அய்யம்மாள், மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்தல அதிபர் அந்தோணி அ.குரூஸ் ஜெபம் செய்து ஆசியுரை வழங்கினார். நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் பி.கே.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,000-ஐ ரூ.1,500 ஆக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, காமநாயக்கன்பட்டியில் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் மற்றும் சிறப்பு பள்ளி அமைக்க வேண்டும் என அரசை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் பாரதி மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பழனிச்சாமி, கொப்பம்பட்டி ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மரியோஅந்தோணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்