வரி செலுத்துவோருக்கான ஆலோசனை கூட்டம்
வரி செலுத்துவோருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வரி செலுத்துவோருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கான வரி குறைத்தல் தொடர்பாகவும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் அரசுக்கு அனுப்பப்படுவது குறித்தும், கொள்கை சாரா முடிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், துணை ஆணையர் (வணிகவரி) பாலகிருஷ்ணன், மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை உதவி ஆணையர் சுரேஷ், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.