கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சங்கராபுரத்தில் கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் கழிவுநீர் வாகன உரிமையாளர்ளுக்கான ஆலோசனை கூட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். இதில் நச்சு தொட்டியில் நேரடியாக ஆட்களை இறக்குவது மற்றும் கழிவு நீரை பொது இடங்களில் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கழிவு நீர் வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.