கபடி போட்டி விதிமுறைகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

பாவூர்சத்திரத்தில் கபடி போட்டி விதிமுறைகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-07 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கபடி போட்டிகள் நடத்தப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ் மேனன் மற்றும் ஆசீர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கபடி குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் அனைத்து கபடி போட்டிகளுக்கும் தகுதியான நடுவர்களை நியமிக்க வேண்டும். போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களில் இரண்டு நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும், போட்டிகள் நடத்தும் நேரம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இருக்க வேண்டும், போட்டிகளை நடத்தும் நபர் அல்லது குழுவில் இருந்து எழுத்துப் பூர்வமாக போட்டி நடத்துவதற்கான உறுதிமொழி கடிதம் பெற வேண்டும்.

போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் சாதியை குறிக்கும் அடையாளங்கள், வாசகங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. சாதி தலைவர்கள் பற்றிய பாடல்கள் ஒளிபரப்ப அனுமதி இல்லை.

போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் போட்டிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு போட்டி நிறுத்தப்படும்.

கபடி போட்டி தொடங்குதல் முதல் முடியும் வரை டாக்டர்களுடன் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் கபடி குழுக்களுக்கு மட்டுமே போட்டிகளை நடத்திட அனுமதி வழங்கப்படும் என கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்