வேதாரண்யம்:
வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது கலந்தாய்வு கூட்டம் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா, வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக போலீஸ் துறை சார்பில் நடந்த பெட்டிசன் மேளாவில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 40 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.