அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-04 17:54 GMT

தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். தமிழக அரசு திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர் கலந்து பேசுகையில், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நீர்பாசனம், ஊட்டச்சத்து ஆகியவை மூலம் மனித வள குறியீடு சார்பாக கணக்கிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல் முன்னேற விளையும் ஒன்றியங்களின் செயல்பாடுகள் குறித்து கணக்கிடப்பட உள்ளது. ஆகையால் அனைத்துத்துறை அலுவலர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் கூட்டு முயற்சியோடு செயல்படுவதன் மூலம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தை முன்னேற விளையும் ஒன்றியமாக மாற்றிட முடியும், என்றார்.பின்னர் கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் வளரிளம் பெண்களுக்கு உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் ரத்த சோகை குறைபாடு குறித்து மாணவிகளிடம் கலந்துரையாடினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பொருளாதாரத்தில் மேம்படுத்தும் வகையில் ரூ.1 லட்சத்திற்கான வங்கி கடன் உதவியினை வழங்கினார். மேலும்கள்ளை கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை முறை மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்