புதிய கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

புதிய கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-29 18:33 GMT

க.பரமத்தி அருகே உள்ள காட்டுமன்னூர் பகுதியில் புதிதாக கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் காட்டுமுன்னூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் கோட்டாட்சியர் வியாகத்அலி தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இந்த பகுதியில் கல்குவாரி அமைத்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு, ஊராட்சிக்கு அதிக வருவாய் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும் என ஆதரவு தெரிவித்தனர். சமூக ஆர்வலர் முகிலன் உள்பட சிலர் இந்த பகுதியில் கல்குவாரி அமைந்தால் நிலநடுக்கம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும், தீமைகள் பல நடக்கும் எனவே அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதில், கல்குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்(க. பரமத்தி),வினோதினி (வேலாயுதம்பாளையம்) ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்