வேட்டுவ கவுண்டர் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

வேட்டுவ கவுண்டர் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-03 18:56 GMT

ஈரோட்டில் வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி புதிய திராவிட கழகம், கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்கம் சார்பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதற்கு புதிய திராவிட கழக நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வஞ்சி மாநகரை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த வெஞ்சமனுக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும், வேட்டுவ கவுண்டர்களின் உட்பிரிவுகளான வேடர் வேட்டுவர், வில் வேட்டுவர், மலைவாழ் வேடன் உள்ளிட்ட பல பெயர்கள் அழைக்கப்படும் அனைவரையும் எம்.பி.சியாக வேட்டுவகவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும்,

ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வது, இதில், கரூரில் இருந்து மட்டும் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்