தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம்

சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-04-29 19:00 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி, குற்றவியல் நீதிபதி கலையரசி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கூட்டத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெறுகின்ற தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் குறித்தும், 5 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், சிறுகுறு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கும், குடும்ப நல வழக்குகளை முடித்து வைப்பதற்கும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து, தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவலோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ரத்தினராஜ், நாகராஜ், எபநேசர் ராய்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்