விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்
கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் முனீஸ்வரன், சக்கரவர்த்தி, செங்குட்டுவன் (தனிப்பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி விழாக் குழுவினரிடம் பேசுகையில், விநாயகர் சிலையை நிறுவ சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட களிமண்ணலான சிலைகள் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விநாயகர் சிலைகளை அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட அரசின் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.