காலை உணவு திட்ட பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

சோளிங்கரில் காலை உணவு திட்ட பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-19 18:41 GMT

சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் பொறுப்பாளர்கள், உதவியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சோளிங்கர் தடக்கான்குளம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் அலமேலு தலைமை வாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சுசீலா, கவிதா, சரவணன், பூபதி சன்முகம் உள்ளிட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் 285 சமையல் பொறுப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். சோளிங்கர் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார். சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ரவேலு, வெங்குபட்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்