திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டம்

திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

Update: 2023-05-31 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டங்களுக்கு பணிகள் தேர்வு செய்வது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்து பேசப்பட்டது. பின்பு 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான பணிகளில் குடிநீர் பணிகள் 30 சதவீதமும், சுகாதார பணிகள் 30 சதவீதமும், சாலை மற்றும் இதர பணிகள் 40 சதவீதமும் தேர்வு செய்வது குறித்தும் பேசப்பட்டது. இதில் குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்