சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.

Update: 2022-10-27 18:45 GMT


கருத்துகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பதிவுத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலக எல்லைகள் மறு சீரமைப்பு செய்வது தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் மறுசீரமைப்புக்கு முன்பு கள்ளக்குறிச்சி எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 13 கிராமங்களும், கள்ளக்குறிச்சி எண் 2 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 26 கிராமங்களும், சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 69 கிராமங்களும், வடபொன்பரப்பி சார்பதிவாளர் அலுவலகத்தில் 27 கிராமங்களும், தியாகதுருகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 25, வடக்கானந்தல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 44, எலவனாசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 58, சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 52, நாகலூர் 26, ரிஷிவந்தியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 39 கிராமங்கள் என 10 சார்பதிவாளர் அலுவலகத்தில் மொத்தம் 379 கிராமங்கள் உள்ளன.

மறுசீரமைப்பு

கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்திற்குட்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் மறுசீரமைப்புக்கு பின்பு கள்ளக்குறிச்சி எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 13 கிராமங்களும், கள்ளக்குறிச்சி 2 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 26, சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 58, வடபொன்பரப்பி சார்பதிவாளர் அலுவலகத்தில் 16, தியாகதுருகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 26, வடக்கானந்தல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 21, எலவனாசூர்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 61,

சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 41, நாகலூர் 27, ரிஷிவந்தியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 27 கிராமங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தாலுகாக்களான கல்வராயன்மலை சார்பதிவாளர் அலுவலகத்தில் 44 கிராமங்கள், வானாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 31 கிராமங்கள், விருதாச்சலம் பதிவு மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 46 கிராமங்கள் கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டும், விழுப்புரம் பதிவு மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 59, மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் 26 கிராமங்கள் கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டும், கடலூர் பதிவு மாவட்டத்திலுள்ள திருநாவலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 36, கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு மறுசீரமைப்புக்கு பின்பு 16 சார் பதிவாளர் அலுவலகங்களில் 558 கிராமங்கள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்கலாம்

இது தொடர்பான விபரங்களை அந்தந்த பகுதிக்குட்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை சார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ கடிதம் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 15.11.2022-ந் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கடலூர் துணை பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பரமேஸ்வரி, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ரகுமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம் மற்றும் அனைத்து சார் பதிவாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்