முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு
காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடக்கிறது.
காரிமங்கலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம். எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகியவற்றிற்கான மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கை கோரும் மாணவிகள் இந்த கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.