கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-10-06 19:07 GMT

கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வெண்ணைமலை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலையின்மை, விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலன் கருதி 36-வது வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும், பென்ஷன் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பெண் தொழிலாளருக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும், கரூர் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் தேங்கியுள்ள பணப்பயன் மனுக்களை விரைந்து பரிசீலித்து பண பழங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்