கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்

Update: 2023-04-02 20:02 GMT

தஞ்சை விஸ்வபாரத அமைப்புசாரா மற்றும் கட்டுமான பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பாண்டித்துரை தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளராக சீனிவாசன், கடலூர் மாவட்ட தலைவராக கோவி.மகாலிங்கம், செயலாளராக கோமதிதிருஞானசம்பந்தம், திண்டுக்கல் மாவட்ட செயலாளராக நந்தினி கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ஆறுமுகம், சுப்பிரமணியன், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்