கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2023-01-03 18:45 GMT

கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ.வின் கட்டுமான தொழிலாளர் சங்க பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு கட்டுமான தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமையாக்க வேண்டும்.ஓய்வூதியும் பெரும் தொழிலாளர்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்