கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-03 18:45 GMT

குழித்துறை:

கள ஆய்வு என்று கூறி கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தியதை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று மார்த்தாண்டம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட பொருளாளர் ரசலானந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம் தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நல்லூர் வட்டாரக்குழு தலைவர் ஜாண், முன்னாள் கவுன்சிலர் பொன்.சகாதேவன், சங்க நிர்வாகிகள் சகாய ஆன்டனி, சோபனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இறுதியில் சங்க மாநில குழு உறுப்பினர் சுரேஷ்குமார் முடித்து வைத்து பேசினார். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்