கட்டிட தொழிலாளி தற்கொலை

மேலப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-11-30 20:54 GMT

நெல்லை மேலப்பாளையம் பி.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் இசக்கிமுத்து (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்