கட்டிட தொழிலாளி தற்கொலை
புதுக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை அருகே உள்ள நடுசெக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் குப்புசாமி (வயது 44). கட்டிட தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த குப்புசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.