மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி
எரியோடு அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலியானாா்.;
குஜிலியம்பாறை தாலுகா, கொல்லப்பட்டி அருகே உள்ள ராமகிரியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). கட்டிட தொழிலாளி. நேற்று இவர், எரியோடு அருகேயுள்ள பாறைபட்டியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்குவதற்கு சுவிட்ச்சை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாலாஜி மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில், எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.