மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2022-08-16 18:26 GMT

வாணியம்பாடி பஷூராபாத் 3-வது தெருவில் பஇக்ராம் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த பணியில நியூடவுன் பகுதியை சேர்ந்த கோபால் (வயது 55) என்பவர் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

நேற்று காலை அவர் வீட்டின் வெளியே கட்டிட பணிக்காக கட்டியிருந்த சாரத்தை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக அவருடைய கை சாலையில் உள்ள மின்கம்பி மீது பட்டுவிட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் மின்சார துறையினர் மின்சார இணைப்பு தூண்டித்தனர்.

இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்