மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
சுல்தான்பேட்டை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன்(வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே சின்ன கம்மாளப்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்கு வந்தார்.
அப்போது கீழே கிடந்த வயரை வலது கையால் எடுத்தபோது, திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்த அவரை, சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.