கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை

முக்கூடல் அருகே, கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-14 19:59 GMT

முக்கூடல்:

முக்கூடல் அருகே, கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.

கட்டிட தொழிலாளி

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா என்ற துரை (வயது 53). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். பின்னர் அவர் லட்சுமிபுரம் விலக்கு எதிரில், முக்கூடல்-கடையம் மெயின்ரோட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை-மகன் கைது

சுப்பையா கொலை குறித்து மனைவி உச்சிமாகாளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சுப்பையா கொலை தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த மாரியப்பன், அவருைடய மகன் குட்டி என்ற துரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

மாரியப்பனின் மகளுக்கும், சுப்பையாவின் மகன் மாரிமுத்துவுக்கும் திருமணம் நடந்தது. இந்தநிலையில் மாரியப்பன் மகள் கணவர் வீட்டில் இருந்து தந்தை வீட்டுக்கு வந்து வாழ்ந்து வருகிறார். மகளின் வாழ்க்கை பாதித்த ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் நேற்று காலை தனது மகனுடன் சென்று சுப்பையாவை கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்