மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

எடப்பாடி அருகே வீடு கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-03 19:54 GMT

எடப்பாடி:-

எடப்பாடி அருகே வீடு கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி

எடப்பாடியை அடுத்த கல்வடங்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மோனிஷா. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் எல்லைமடை பகுதியில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அங்கு அவர் சென்டரிங் பணிக்கு முட்டுக்கொடுக்க இரும்பு கம்பி ஒன்றை தூக்கினார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பி மீது, தினேஷ்குமார் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி உரசியது.

மின்சாரம் தாக்கி பலி

இதனால் அவரை மின்சாரம் தாக்கி, தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தினேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்